தமிழ்நாட்டுக்கு நொடிக்கு ஐயாயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி ஆற்று நீர்ப் பகிர்வு தொடர்பான காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23ஆவது கூட்டம் இன்று தில்லியில் நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ் கே கல்தர், தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு நீர்வளத்துறைச் செயலர் சந்தீப் சக்சேனா, காவிரித் தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் தமிழக அரசு சார்பில் கலந்துகொண்டனர்.
அப்போது அடுத்த 15 நாட்களுக்கு நொடிக்கு 24 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் எனத் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர்.
மழைப்பொழிவு குறைவாக உள்ளதால் தண்ணீர் திறந்துவிட இயலாது எனக் கர்நாடக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தின் இறுதியில், தமிழகத்துக்கு நொடிக்கு ஐயாயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
+ There are no comments
Add yours