அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை !

Spread the love

தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு தினத்தை முன்னிட்டு, பரமக்குடியில் அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தியாகி இம்மானுவேல் சேகரனார் 1924-ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று பிறந்தார். இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமம் ஆகும். இவர் 1942-இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார். மேலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் அவர் போராடினார் .

இந்நிலையில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு தினத்தை முன்னிட்டு இம்மானுவேல் சேகரனார் நல்லடக்கம் செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி கூறிருப்பதாவது :
சுதந்திர போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட – விளிம்புநிலை மக்களின் உரிமைக்காக போராடியவருமான தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 66-ஆவது நினைவு நாள் இன்று.

அதனையொட்டி, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி சக அமைச்சர் பெருமக்கள் – நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களுடன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம்.

சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சமத்துவம் படைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். இமானுவேல் சேகரன் அவர்களின் புகழ் ஓங்கட்டும் என தனது ட்விட்டர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours