இன்றைய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மோதும் அணிகள்!!

Spread the love

இந்தியா, இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஒரு பிரிவிலும், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் ஒரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.

இந்த தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணி அளவில் ஆட்டம் தொடங்குகிறது.

மேலும், இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தானுடன் எதிர்கொள்கிறது. இந்த போட்டி வருகின்ற 2ம் தேதி இலங்கையில் நடக்கவிருக்கிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours