மொராக்கோ நாட்டின் மாரகேஷ் நகரத்தில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 632ஆக அதிகரித்துள்ளது. மேலும், காயமடைந்த 300 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நில நடுக்கம் ஏற்பட்ட இடத்தில் மீட்புப்பணி விரைவாக நடந்து வருகிறது. மேலும், இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதம் அடைந்ததுடன், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கடலோர நகரங்களான ரபாட், காசாபிளாங்கா மற்றும் எஸ்ஸௌயிராவிலும் இந்தவலுவான நடுக்கம் உணரப்பட்டது. இங்கு கட்டிடங்கள் என பெரும்பாலான சேதங்கள் ஏற்பட்டதாக அந்நாட்டு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத, மிக்பெரிய உயிர் சேதங்களை இந்த நிலநடுக்கம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours