ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள லால்சலாம் படத்தின் ட்ரைலர் வெளியாகி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
தமிழ் சினிமாவின் இளம் நாயகர்களான விஷ்ணு விஷால், விக்ராந்த் கூட்டணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அன்புமகளான ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமே ‘லால் சலாம்’.
கிரிக்கெட்டை மைய்யமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சூப்பரான கேமியோ ரோலில் நடித்துள்ளார் .
இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலைவரின் இந்த படம் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இப்படம் பிப் 9 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மேலும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரென் ஜெயண்ட் நிறுவனம் தட்டி தூக்கி உள்ளதகவும் படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் மூலம் அறிவித்தது .
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் படு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்தனர்.
இதையடுத்து ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் லால் சலாம் படத்தின் ட்ரைலரை ட்ரைலர் படக்குழு நேற்று வெளியிட்டது .
ட்ரைலரின் ஆரம்பம் முதல் திகிலூட்டும் காட்சிகளை காட்டியுள்ள படக்குழு விளையாட்டு மோதல் , சாதி கலவரம் உள்ளிட்ட முக்கிய சமூக பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளது தெளிவாக தெரிகிறது.
இப்படத்தில் மொய்தின் பாயாக வரும் ரஜினிகாந்தின் மும்பையில் அவர் என்ன செய்தார் தெரியுமா என சொல்லும் காட்சிகள் நிச்சயம் திரையரங்குகளில் விசில் பறக்கும் என இப்போதே நன்றாக தெரிகிறது.
ஆக மொத்தம் இந்த ட்ரைலரில் காதல் காட்சிகள் இருக்கிறதோ இல்லையோ ஆரம்பம் முதல் முடிவு வரை ஆக்சன் காட்சிகள் நிறைந்திருக்கிறது.
இந்நிலையில் தனது அன்பு மகளான ஐஸ்வர்யாவின் நடிப்பில் முகம் காட்டியுள்ள ரஜினிகாந்த் இந்த படத்திற்கு மிக பெரிய ப்ரோமோஷன் என்றாலும் எதிர்பார்த்தபடி இந்த படம் வெற்றி பெறுமா என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
+ There are no comments
Add yours