நடிகை அமலாபாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த விஷயத்தை அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
நடிகை அமலாபால் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார். இவருக்கும் ஜெகத் தேசாய் என்ற தொழிலதிபருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் ஆன இரண்டே மாதத்தில் தாங்கள் பெற்றோர் ஆன விஷயத்தை அறிவித்தது இந்த ஜோடி. கடந்த வாரத்தில் நடிகை அமலாபால் குழந்தை பிறப்பை எதிர்நோக்கி இருப்பதாகச் சொல்லி மருத்துவமனையில் இருந்து புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.
இப்போது கடந்த 11ம் தேதி தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக இவர்கள் மகிழ்ச்சியான செய்தி சொல்லி இருக்கிறார்கள். குழந்தைக்கு இலை எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இயற்கை மீது அதீத ஆர்வம் கொண்டவரான அமலாபால் காடுகள், மலைகளில் பயணம் செய்வதில் பிரியம் கொண்டவர்.
அதனால், இயற்கை சார்ந்தே இருக்க வேண்டும் என தங்கள் மகனுக்கும் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளது இந்த ஜோடி. குழந்தைக்கு தங்கள் வாழ்த்துகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours