நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். ‘தெறி’ ரீமேக்கான ‘பேபி ஜான்’ படம் மூலம் இந்தியில் அறிமுகமாக இருக்கிறார். தமிழில் அவர் நடிப்பில் ‘ரிவால்வர் ரீட்டா’ வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உறவினர் ஒருவருடன் அவருக்கு டிசம்பர் மாதம் கோவாவில் திருமணம் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகவலை கீர்த்தி சுரேஷ் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. அவர் திருமணம் குறித்து இதற்கு முன்பும் சில முறை செய்திகள் பரவின. அதை அவர் தந்தை மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours