சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து முதல் நாளிலேயே வெளியேற்றப்பட்ட நடிகை சாச்சனா மீண்டும் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த வாரம் தொடங்கியது. நடிகர் கமல்ஹாசனுக்குப் பதிலாக நடிகர் விஜய்சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனின் அதிரடியாக போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 24 மணி நேரத்திலேயே எவிக்ஷன் என்ற அறிவிப்பை விஜய்சேதுபதி கொடுத்தார்.
இந்த அடிப்படையில் நிகழ்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்தில் ‘மகாராஜா’ படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனா சக போட்டியாளர்களால் வெளியேற்றபட்டார். இது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை கிளப்பியது. ஒரு போட்டியாளரை பற்றி மக்கள் தெரிந்து கொள்ளும் முன்பே அவரை வெளியேற்றுவது எந்த அடிப்படையில் நியாயம் என்று பிக்பாஸ் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் இன்று (அக்.11) வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில் சாச்சனா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். வெளியே சென்று நிகழ்ச்சியை பார்த்தவருக்கு போட்டியாளர்களை பற்றியும் அவர்களை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்தும் ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கும். இதனால் போட்டியை சுவாரஸ்ப்படுத்த டிவி நிர்வாகம் மீண்டும் அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
+ There are no comments
Add yours