நயனுக்கு ஆதரவாய் தனுஷ் பட கதாநாயகிகள்.. இது லிஸ்ட்லயே இல்லையே !

Spread the love

சென்னை: நடிகை நயன்தாரா அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என இவர் கூட்டணி அமைத்த படங்கள் அனைத்துமே ஏறக்குறைய வெற்றிப்படங்கள்தான். அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்துவந்த நயன்தாரா 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2022ம் ஆண்டில் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்களின் காதல் மற்றும் திருமணத்தின் அடையாளமாக இவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என இரு மகன்கள் உள்ளனர். வாடகைத்தாய் முறையில் இவர்களை பெற்றெடுத்தாலும் பாசத்தை காட்டி வளர்த்து வருகின்றனர். தொடர்ந்து படங்களில் நடித்துவரும் நயன்தாரா, தயாரிப்பாளராகவும் பிசினஸ்வுமனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

நடிகை நயன்தாரா அடுத்தடுத்து சிறப்பான படங்களில் தன்னை இணைத்து வருகிறார். 20 ஆண்டுகளை கடந்து இவரது திரைப்பயணம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என சிறப்பாக அமைந்து வருகிறது. இந்த காலகட்டங்களில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என வெற்றிப்பட நாயகர்களுடன் இணைந்து அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்துவந்த நயன்தாரா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டு சிறப்பான வெற்றியை அனைத்து படங்களிலும் சாத்தியப்படுத்தி வந்தார். இடையில் இயக்குநர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2022ம் ஆண்டில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தை அடுத்துள்ள ஒரு ரெசார்ட்டில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான் என இந்திய அளவில் பிரபலமான பல நடிகர்களும் இவர்களது திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இதனிடையே, இவர்களது திருமணம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகவும் பலகோடி ரூபாய்களுக்கு இவர்களது திருமணத்தை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாகவும் இயக்குநர் கௌதம் மேனன் இவர்களது திருமணக் கொண்டாட்டத்தை இயக்கியுள்ளதாகவும் கூறப்பட்ட,து.

ஆனால் தொடர்ந்து இரு ஆண்டுகள் கடந்த நிலையில் வரும் 18ம்தேதிதான் இவரது இந்த ஆவணப்படம் நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளது. Advertisement நயன்தாரா ஆவணப்படம்: இதையொட்டி இதன் ட்ரெயிலர், பிரமோ ஆகியவை வெளியாகியுள்ள நிலையில், அதில் இவர்கள் இருவரும் இணைய காரணமான நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தன. மொத்தம் 3 வினாடிகள் மட்டும் இந்தகாட்சிகள் இணைக்கப்பட்ட நிலையில், படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ், 10 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

இந்தக்காட்சிகளை ஆவணப்படத்தில் சேர்ப்பதற்காக தனுஷிடம் நயன்தாரா NOC கேட்ட நிலையில் அவர் கடந்த 2 ஆண்டுகளாக அலைகழித்து வந்ததாகவும் நயன்தாரா குற்றம் சாட்டியுள்ளார்.

தனுஷின் இந்த செய்கைகளை குறிப்பிட்டு தன்னடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நயன்தாரா கொதிப்புடன் 3 பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த இரு ஆண்டுகளாக தான் NOCக்காக அலைகழிக்கப்பட்டது குறித்து கோபம், வருத்தம் உள்ளிட்டவை அனைத்தும் மேலோங்க அவர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு தற்போது கோலிவுட், மல்லுவுட் என பேதமின்றி சக நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பார்வதி, நஸ்ரியா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நயன்தாராவிற்கு ஆதரவு தெரிவிதுள்ள நிலையில், இவர்களில் பலர் தனுஷுடன் இணைந்து நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours