பிரபல பாலிவுட் நடிகை மர்ம மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி !

Spread the love

பிரபல பாலிவுட் நடிகை மாளபிகா தாஸ் தனது அப்பார்ட்மெண்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தம், வாய்ப்புகள் கிடைக்காதது எனப் பல காரணங்களால் பிரபலங்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து வரும் துயர சம்பவம் சமீப காலத்தில் அதிகரித்து வருகிறது. இந்தப் பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகை மாளபிகா தாஸூம் இணைந்திருப்பது சோகம்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், அசாமில் இருந்து மும்பை கிளம்பி வந்து அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வந்தார் மாளபிகா. கடந்த ஜூன் 6ம் தேதி இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியிருக்கிறது. இதனால், பதறிப் போன பக்கத்து வீட்டார் காவல்துறையில் புகார் கொடுத்திருக்கின்றனர்.

இந்தப் புகாரை அடுத்து, காவல் துறையினர் வீட்டை உடைத்துப் பார்த்தனர். இதில் மாளபிகா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்காக கூர்கானில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், மாளபிகாவின் பெற்றோர் வயதானவர்கள் என்பதால் அவர்கள் உடலை வாங்க வரவில்லை என்ற விஷயமும் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நண்பரும் நடிகருமான அலோக்நாத் பதக், மாளபிகாவின் உடலை வாங்கி தகனம் செய்துள்ளார். 32 வயதான மாளபிகா கடைசியாக கஜோலுடன் இணைந்து ‘டிரையல்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இவரின் இந்த எதிர்பாராத மரணம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours