தூத்துக்குடி: “அற்புதமான வாழ்வியலை கொடுக்கக்கூடிய இசையமைப்பாளர் இளையராஜா.. காலத்திற்கும் நாம் படித்துக்கொண்டே இருக்க வேண்டிய புத்தகம்தான் இளையராஜா” என்று நெகிழ்ந்து கூறியிருக்கும் நடிகர் சூரி, கங்குவா படம் குறித்தும் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார் நடிகர் சூரி.. சாமி தரிசனம் முடித்துக்கொண்டு வெளியே வந்த நடிகர் சூரியுடன், கடற்கரையில் கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் ஆர்வத்துடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, கங்குவா படம், முதல், விடுதலை -பாகம் 2 வரை பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு, தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருவது வாடிக்கையாகும்.. அந்தவகையில், நாள்தோறும் பக்தர்களின் வருகை இங்கு அதிகரித்தவாறே உள்ளது..
வழக்கமாக வார விடுமுறை, அரசு விடுமுறை தினங்களில் பக்தா்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.. தற்போது காா்த்திகை மாதம் ஆரம்பமாகி உள்ளது.. கார்த்திகை மாதம் என்றாலே தனிசிறப்பு என்பதால், கார்த்திகை மாத தொடக்கத்திலிருந்தே சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்த வண்ணம் உள்ளனர்.. அதேபோல, கார்த்திகை மாதத்தில் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களும் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்கின்றனர்.
விடுமுறை தினம், முகூா்த்த நாள், சபரிமலை சீசனையொட்டி, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சாமி தரிசனம் செய்ய திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தார்கள்.. கோயில் நடை அதிகாலையிலேயே திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
பக்தர்கள் கூட்டம்: அதிகாலை முதலே பக்தா்கள் கடல், நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.. இதனால், கோயில் வளாகம் முழுவதுமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார் நடிகர் சூரி.. சாமி தரிசனம் முடித்துக்கொண்டு வெளியே வந்த நடிகர் சூரியுடன், கடற்கரையில் கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் ஆர்வத்துடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, கங்குவா படம், முதல், விடுதலை -பாகம் 2 வரை பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
நடிகர் சூரி சொல்லும்போது, “கடந்த வருடமும் திருச்செந்தூர் முருகனை பார்க்க வந்திருந்தேன். இந்த ஆண்டும் ஐயாவின் ஆசியை பெற வந்திருக்கிறேன். வரிசையாக நிறைய படத்தில் நடிக்க உள்ளேன். விடுதலை 2 இப்போது வரப்போகிறது. அடுத்த மாதம் 20-ம் தேதி என்று நினைக்கிறேன். விடுதலை படத்தின் முதல் பாகம் எப்படி உங்கள் அனைவருக்கும் பிடித்திருந்ததோ, அதுபோலவே, விடுதலை 2-ம் பிடிக்கும்.
கங்குவா படம் சிறப்பாக உள்ளது.. ஒரு ரசிகரா, படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.. என் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று பார்த்தேன்.. எதிர்மறையாக சிலர் சொல்கிறார்கள்.. அதையெல்லாம் நாம் மனதில் எடுத்துக்கொள்ள வேண்டாம். எதிர்மறை விமர்சனங்களால் தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள சிலர் முயற்சி செய்கிறார்கள்.. ஆனால், அதிகமானோர் பாசிட்டிவ் கருத்துக்களையே சொல்கிறார்கள். கங்குவா படக்குழு தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.
என்று தெரிவித்தார்.
+ There are no comments
Add yours