தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படங்களில் மற்ற எல்லா படங்களையும் ஓரங்கட்டி ‘அமரன்’ வசூல் சாதனை புரிந்து வருகிறது.
‘அமரன்’ திரைப்படத்தை எல்லா தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு முன்னாள் CRPF நலன் அமைப்பு ‘அமரன்’ திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
‘அமரன்’ எனும் திரைப்படத்தில் தேர்தலின் போது நடத்தப்படும் தாக்குதல் காட்சிகளில், எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் CRPF வீரர்கள் படுகொலை செய்யப்படுவது வேதனையும், அதிர்ச்சியும் அளிப்பதாக, அந்த படத்திற்கும் அதன் படக்குழுவிற்கு தமிழ்நாடு முன்னாள் CRPF நலன் அமைப்பு தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், இப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்குமாறும், அவர்கள் விடுத்துள்ள கோரிக்கை குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours