தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார், ராஷ்மிகா மந்தனா. பான் இந்தியா ஸ்டாராக மாறியிருக்கும் அவர், இப்போது ‘குபேரா’, ‘புஷ்பா 2’, ‘சிக்கந்தர்’, ‘ஜாவா’உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாகக் கூறப்படும் நிலையில் அவர் வீட்டில் தீபாவளியை கொண்டாடியுள்ளார் ராஷ்மிகா.
தனது தீபாவளி கொண்டாட்டப் புகைப்படங்களை அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்களை விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
அந்தப் புகைப்படங்களில் இருக்கும் காட்சிகளை வைத்து விஜய் தேவரகொண்டா வீட்டில் ராஷ்மிகா தீபாவளியைக் கொண்டாடியதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
+ There are no comments
Add yours