தயாரிப்பு நிறுவனம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் !

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் லோகேஷ் கனகராஜ் கடைசியாக லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். தற்பொழுது, தலைவர் 171 படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன் ‘G Squad’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களின் படங்களை தயாரித்து வழங்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேனரில் வெளியிடப்படும் முதல் படமான இந்த படத்துக்கு ‘FIGHT CLUB’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில், உறியடி ஹீரோ விஜய்குமார் நடிக்கிறார். இந்த படத்தை ரீல் குட் பிளம்ஸ் தயாரித்துள்ளது. ‘FIGHT CLUB’ படத்தை இயக்கும் இயக்குனர், லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் என்பதாலும், உறியடி நடிகர் அவரது நண்பர் என்பதாலும், இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறார் என்பது குறிப்பித்தக்கது.

இந்நிலையில், ‘FIGHT CLUB’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது, மேடையில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘FIGHT CLUB’ படம் குறித்தும், விஜய்குமார் குறித்தும் பேசினார். இறுதியில் தனது தயாரிப்பு பேனரான ‘G Squad’ குறித்து சிலவற்றை பகிர்ந்து கொண்டார்.

அதாவது, இந்த தயாரிப்பு நிறுவனம் ஏன் தொடங்கினேன் என்று பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் பேசுகையில், “2012 – 2013 காலகட்டத்தில் ஒரு படம் ஒன்னு பண்ணனும், யோசித்து என் நண்பர்கள் தான் பணம் கொடுத்து உதவி செய்தார்கள். அதுவும் முக்கியமாக ஸ்ரீ-னு ஒருத்தன்” பணம் கொடுத்து கலம் என்ற தலைப்பில் ஷாட் பிலிம் ஒன்றை எடுத்தோம்.

அதன் மூலமாக தயாரிப்பாளர்களை வரவழைத்து ஒரு வாய்ப்பு கிடைத்தது தான் மாநகரம் என்ற திரைப்படம். அன்னைக்கு நான் பெருசா வளர்ந்துவேன் நமக்கு ஏதும் நடக்கும் என்று என் நண்பர்கள் நினைக்கமால் என் நண்பர்கள் பணம் கொடுத்து பண்ணது தான் அந்த படம். அது மாதிரி, தான் ‘G Squad’ கம்பெனி இதன் மூலமாக சம்பாதிக்கணும் யோசித்து இதை தொடங்கவில்லை. இதன் மூலமாக நிறைய திறமைசாலிகளை வளர்பதற்காக தொடங்கினேன். இதை வைத்து 4 பேருக்கு பண்ணனும்” என்று கூறியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours