ரீமா சென்… இவ்வளவு பெரிய பையனா?!

Spread the love

நடிகை ரீமா சென் மகனின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரீமா சென் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். இந்நிலையில், அவருடைய மகனின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகை ரீமா சென் கொல்காத்தாவை சேர்ந்தவர். இவர் கடந்த 2000-ம் ஆண்டு வெளிவந்த சித்திரம் என்கிற தெலுங்கு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.அதையடுத்து கோலிவுட்டில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய மின்னலே படம் மூலம் இவரை அறிமுகப்படுத்தினார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார் ரீமே சென்.

மின்னலே திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதும் கோலிவுட்டில் நடிகை ரீமா சென்னுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வந்தன.அதனது தொடர்ந்து நடிகர் சீயான் விக்ரமின் ஜோடியாக தூள், விஜய்யுடன் பகவதி, விஷால் உடன் செல்லமே, சுந்தர் சி இயக்கிய கிரி படம் என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வளம் வந்தார் ரீமா சென்.ஒரு ஹீரோயினாக மட்டுமின்றி, வில்லியாகவும் சிம்பு இயக்கி, நடித்த வல்லவன் திரைப்படத்தில் கீதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய மிரட்டலான நடிப்பால் கலக்கி இருந்தார்.தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் ரீமா சென்னின் நடிப்புக்கு தனி அங்கீகாரம் கிடைத்தது. தமிழில் கடைசியாக சினேகா பிரிட்டோ இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படத்தில் ரீமா சென் நடித்தார்.

அதன் பின், கடந்த 2012-ம் ஆண்டு ரீமா சென், ஷிவ் கரண் சிங் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொண்ட பின்னர் சினிமாவை விட்டும் விலகினார்.

2013-ம் ஆண்டு இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு ருத்ரவீர் என பெயரிட்டு உள்ளனர்.
அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதனைப் பார்த்த ரசிகர்கள் ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சர்யத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours