திண்டுக்கல் முள்ளிப்பாடி தேவாலயத்திற்குள் பயபக்தியோடு வரும் இந்த பக்தர் மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு கர்த்தரின் முன்பாக மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறார்.
அதன் பிறகு அருகில் இருந்த உண்டியலில் யாருக்கும் தெரியாமல் கையை விட்டு காசை எடுத்து தன் பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார்.
இந்த சிசிடிவி காட்சியை எதேர்ச்சையாக பார்த்த தேவாலய நிர்வாகிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதே போல் இதற்கு முன்பாக பலமுறை உண்டியலில் இருந்து காசு காணாமல் போனது தெரியவந்தது.
அதன் பிறகு தான் இந்த பக்தர் பயபக்தியோடு தேவாலயத்திற்கு வந்து கர்த்தரின் முன்பாக மண்டியிட்டு பாவ மன்னிப்பு கேட்டு விட்டு ஆலய உண்டியலில் இருந்து காசை திருடி வருவதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரியவந்தது இது தொடர்பாக காவல் நிலையத்தில் தேவாலய நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்…. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
+ There are no comments
Add yours