மீண்டும் சிறை செல்லும் பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள்… !

Spread the love

கோத்ரா கலவரத்தைத்தொடர்ந்து, குஜராத்தில் கர்ப்பிணியான பில்கிஸ் பானு வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனால், குற்றவாளிகள் 11 பேரும் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை முன்விடுதலை செய்து குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான் என்றும் குறிப்பிட்டுள்ளதுடன், குற்றவாளிகள் முன்விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறியுள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து ஏற்பட்ட மதக் கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். அஇப்போது, ஐந்து மாத கா்ப்பிணியான பில்கிஸ் பானு என இஸ்லாமிய இளம்பெண், வன்முறையாளா்களால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டாா். மேலும், பில்கிஸ் பானுவின் மூன்று வயது பெண் குழந்தை உள்பட அவரது குடும்ப உறுப்பினா்கள் 7 போ் அந்தக் கலவரத்தில் கொல்லப்பட்டனா். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறை, குற்றவாளகிள் 11 பேரை கைது சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், குஜராத் மாநில அரசு, அவர்களின் தண்டனை காலம் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே குற்றவாளிகள் 11 போரையும் கடந்த ஆண்டு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சிறையிலிருந்து விடுவித்தது. நல்லெண்ண அடிப்படையில் இந்த விடுதலை நடைபெற்றதாக குஜராத் மாநில அரசு கூறியது. விடுதலையான குற்றவாளிகளை பாஜகவினர் மாலை மரியாதை அணிவித்து, தாரை தப்பட்டையுடன வரவேற்றனர். இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது.

குஜராத் மாநில அரசின் நடவடிக்கையை எதிா்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா். குற்றவாளிகள் விடுதலையை எதிா்த்து பல்வேறு பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அமர்வில் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது.

அப்போது, பில்கிஸ் பானு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஷோபா குப்தா, ‘‘வன்முறையாளா்கள் அனைவரும் உள்ளூரைச் சோ்ந்தவா்கள். அவா்களிடம் ஒரு சகோதரி போல பில்கிஸ் பானு கெஞ்சியுள்ளாா். முஸ்லிம்களைக் கொலை செய்யும் ‘ரத்த வெறி’யுடன் அவரைத் துரத்திச் சென்ற வன்முறையாளா்கள், அந்த மதத்தினருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினா். மன்னிக்க முடியாத இது போன்ற குற்றச் செயலில் ஈடுபட்டவா்களை முன்கூட்டியே விடுவிப்பது தவறான செய்தியை சமூகத்தில் விதைப்பதாக ஆகும் என சிபிஐ தெரிவித்துள்ளது’’ என்றாா்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குஜராத் மாநில அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பியது, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், 14 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின், எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்? இதுபோன்ற சலுகைகள் மற்ற கைதிகளுக்கு பொருந்தாதா? முன் கூட்டியே விடுதலை என்ற சலுகைக்கு, இவர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை அடுத்து மனுக்கள் மீதான இறுதி விசாரணை நிறைவு பெற்ற தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தீர்ப்பில், குற்றவாளிகளை விடுதலை செய்து குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குஜராத் மாநிலத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்துவது அதிகாரத்தை அபகரிப்பதற்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும் ஒரு உதாரணம் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.

இதன் காரணமாக விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் மீண்டும் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours