தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ்- தம்பதியினருடன் 3 வயது குழந்தையும் பலி

Spread the love

சீதாபூர்: உத்தரப்பிரதேசத்தில் இன்று காலையில் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் பதிவு செய்யும் போது, பயணிகள் ரயிலில் அடிபட்டு ஒரு நபர் தனது மனைவி மற்றும் மூன்று வயது மகனுடன் உயிரிழந்தார்.

உமரியா கிராமத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பலியானவர்கள் முகமது அகமது (26), அவரது மனைவி நஜ்னீன் (24)மற்றும் அவர்களது மூன்று வயது மகன் அப்துல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஷேக் தோலா அருகே லஹர்பூரில் வசிப்பவர்கள்.

கெரி டவுன் கோட்வாலி காவல்துறை பொறுப்பாளர் அஜீத் குமார் கூறுகையில், ‘ரயில் தண்டவாளத்தில் குடும்பத்தினர் ரீல்ஸ் பதிவு செய்து கொண்டிருந்த போது ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்’ என்று கூறினார்.

கைப்பற்றப்பட்ட 3 பேரின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours