திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே ரூ.2 ஆயிரம் கடன் தகராறில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன் (27). இவர், அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் என்ற மணிகண்டனின் பிறந்தநாள் விருந்துக்காக கடந்த ஒராண்டுக்கு முன்பு ரூ.2 ஆயிரம் பணத்தை கடனாக கொடுத்துள்ளார். பின்னர், அவர் சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்றவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். மேலும், மணிகண்டனிடம் தான் கொடுத்த ரூ.2 ஆயிரம் கடனை கோட்டீஸ்வரன் திருப்பி கேட்டதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை தனது உறவினரான கிருபாகரன் என்பவரிடம் கோட்டீஸ்வரன் கூறி உள்ளார்.
இந்நிலையில், கிருபாகரன் மற்றும் அவரது நண்பர்கள் நேற்று முன்தினம் இரவு மதுபானம் அருந்தியுள்ளனர். அவர்களுடன், மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் உடன் இருந்துள்ளனர். அப்போது, மணிகண்டனிடம் ‘எனது உறவினர் கோட்டீஸ் வரனிடம் வாங்கிய 2 ஆயிரம் ரூபாய் பணத்தை எப்போது கொடுக்க போகிறாய்’ என கிருபா கரன் கேட்டுள்ளார். இதுதொடர் பாக, மணிகண்டன் மற்றும் கிருபா கரன் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
பின்னர், கோட்டீஸ்வரனை கைபேசியில் தொடர்புகொண்ட கிருபாகரன், தன்னை மணிகண்டன் தாக்கியதாக கூறியுள்ளார். இந்த தகவலையடுத்து, அங்கு சென்ற கோட்டீஸ்வரன் நண்பர் களுடன் இருந்த மணிகண்டனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அங்கு மணிகண்டனுக்கு ஆதரவாக இருந்த டில்லிபாபு உள்ளிட்ட சிலர் சேர்ந்து கோட்டீஸ்வரனை தாக்கியுள்ளனர். திடீரென, டில்லிபாபு என்பவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோட்டீஸ் வரனை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த கோட்டீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந் தார். இந்த தகவலறிந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர் விரைந்து சென்று கோட்டீஸ் வரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து டில்லிபாபு, மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours