நாகர்கோவில்: குமரி மாவட்டம் குழித்துறை அருகே மருதங்கோட்டில் சர்வோதய சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு திருவருவுச் சிலை உள்ளது. இந்தச் சிலைக்கு குடியரசு மற்றும் சுதந்திர தினம் உள்ளிட்ட நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுவது வழக்கம்.
இந்த வளாகத்தில் இன்று அதிகாலை புகுந்த நபர்கள் மகாத்மா காந்தி சிலையின் தலைப் பகுதியை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். அத்துடன் அங்குள்ள சுற்றுச் சுவரும் இடிக்கப்பட்டது. இந்த தகவல் இன்று மருதங்கோட்டில் மட்டுமின்றி மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவியது. இது குறித்து சங்க செயலாளர் ஜெயபால் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்தியவர்களை போலீசார் விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காந்தி சிலை சேதப்படுத்த சம்பவத்தால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours