மதுரை: மதுரையில் சிறுவனை கடத்தி ரூ. 2 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் தொடர்புடைய வழக்கில் தேடப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரி மனைவி சூர்யா என்பவர் குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
ஆட்டோ ஓட்டுநருடன் சிறுவனை கடத்திய வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் தாயார் கொடுத்த புகாரில் சிறுவனை போலீஸ் ஏற்கனவே மீட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி மனைவி சூர்யா என்பவர் இன்று குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours