திருப்பூர்: திருப்பூரில் நேற்று முன்தினம் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. இடுவம்பாளையம் அருகே ஊர்வலம் சென்றபோது, சிலைகளுக்கு வழிவிடுவது தொடர்பாக இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் போயம்பாளையம் பகுதியை சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது.
இதுதொடர்பாக வீரபாண்டி போலீஸார் அளித்த புகாரின் பேரில், இடுவம்பாளையத்தை சேர்ந்த நவீன்குமார் (23), வெங்கடேஷ் (19), தேவா (19), ஸ்ரீதர் (19), பாலாஜி (22) மற்றும் 17 வயது சிறுவன் என 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
+ There are no comments
Add yours