நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர்வதற்கான நீட் (NEET UG 2024) நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும். NEET UG 2024 மே 5 ஆம் தேதி நடைபெறும், இதில் 25 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
நாட்டில் உள்ள 645 மருத்துவம், 318 பல் மருத்துவம், 914 ஆயுஷ் மற்றும் 47 BVSc மற்றும் AH கல்லூரிகளில் சேர்க்கைக்காக நடைபெறும் நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு அதிக அளவிலான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதனிடையே நாடு முழுவதும் உள்ள 27,868 இளங்கலை பல் மருத்துவ படிப்புகளில் சேர்க்கைப் பெறுவதற்கும் நீட் தேர்வு மதிப்பெண்கள் பயன்படுத்தப்படும்., 50 அரசு கல்லூரிகளில் 3,513 இடங்களுக்கும், சுயநிதி பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட 263 தனியார் கல்லூரிகளில் 23,620 இடங்களுக்கும் கடந்த ஆண்டு சேர்க்கை நடைபெற்றது.
இந்தநிலையில், இந்தியாவின் சிறந்த பல் மருத்துவ கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF 2023) படி நாட்டின் சிறந்த பல் மருத்துவ கல்லூரிகள் பட்டியலிடப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours