7 நாட்களில் ஒரு லட்சத்தை கடந்த பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு.
கடந்த 6ம் தேதி தொடங்கிய பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவில் இதுவரை 1,00,699 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் 56,044 மாணவர்கள் கலந்தாய்வு கட்டணத்தை செலுத்தியும், 27,755 மாணவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பதை பூர்த்தி செய்துள்ளனர்.
சங்கரன்கோவில் அரசு கலைக் கல்லூரி
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கல்லூரிக்கு நேரில் வந்து இணைய தளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று முதல்வர் விக்டோரியா தங்கம் தெரிவித்துள்ளார்.
இந்த கல்லூரியில்பிஏ ஆங்கிலம், சமூகவியல், பிஎஸ்சி கணினி அறிவியல், புள்ளியியல் மற்றும் பிகாம் வணிகவியல் பாடப்பிரிவுகள் உள்ளது எனவும், விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த கல்லூரியில் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் அரசு விதிகளின்படி கல்வி உதவித்தொகை பெற்றுத் தரப்படும். மேலும், தமிழக அரசின் “புதுமைப்பெண்” திட்டத்தின் கீழ் 6 முதல் 12 வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- பெற்றுத் தரப்படுகிறது.
+ There are no comments
Add yours