2024ம் ஆண்டிற்கான திருத்தப்ட்ட புதிய ஆண்டுதிட்ட அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதன்படி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளை தவிர மற்ற தேர்வுகளை ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வுகளாக ஒன்றாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2, 2 ஏ தேர்வுக்கு முதல்நிலை தேர்வு ஒன்றாகவும், பிரதான தேர்வு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024ம் ஆண்டில் நடத்தவுள்ள போட்டித்தேர்வுகளின் அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இதில், மொத்தம் 19 வகையான பணிகளுக்கு போட்டித் தேர்வுகளை ஆணையம் அறிவித்தது. தற்போது, தேர்வு முறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 19 வகையான பணிகளை 8 வகையான போட்டித் தேர்வுகளாக டிஎன்பிஎஸ்சி மாற்றியமைத்து உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக, குரூப் 2, 2 ஏ தேர்வுக்கு முதல்நிலை தேர்வு ஒன்றாகவும், பிரதான தேர்வு தனித்தனியாக நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று, குரூப் 4, 2, 1 போன்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு போன்று ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் பணிகள் தேர்வையும் டிஎன்பிஎஸ்சி கொண்டு வந்ததுள்ளது. இதன்கீழ், இந்தாண்டு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours