பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் படிப்பை கைவிட்டு விடாத வகையில், அவர்களை துணைத் தேர்வில் பங்கேற்க வைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும், துணைத் தேர்வு தேதி அறிவிக்கப்படும் நிலையில், பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் பெற்றோரை சந்தித்து உரிய அறுவுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படித்த 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
வரும் 6 ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கும், 10 ஆம் தேதி 10 ஆம் வகுப்புக்கும், 14 ஆம் தேதி 11 ஆம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
இந்த தேர்வுகளில் 12 ஆம் வகுப்பில் 12 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோன்று 11 ஆம் வகுப்பில் 9 ஆயிரத்து 500 பேரும், 10 ஆம் வகுப்பில் 17 ஆயிரம் பேரும் தேர்வில் பங்கேற்காமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
இதன்காரணமாக இந்த மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பு கேள்விக்குறியானது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours