தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் குரூப் 4 தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முன் மாதிரி தேர்வாகவும், பதற்றத்தை போக்குவதற்காகவும் முழுமையான அனைத்து பாடங்களும் அடங்கிய வினாத்தாள் அளிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது.
ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பீனிக்ஸ், தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம் மற்றும் என்ஆர். ஐ ஏ எஸ் அகாடமி ஆகியவை இணைந்து இந்த போட்டி தேர்வை நடத்தின. இதில் 276 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். அனைத்துப் பாடங்களில் இருந்து அரசு தேர்வு எவ்வாறு நடத்தப்படுமோ அதேபோல் இந்த தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வு வரும் ஜூன் மாதம் நடக்க உள்ள குரூப் 4 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அச்சத்தைப் போக்கும் வகையில் நடத்தப்பட்டது மேலும் தேர்வு எழுதி முடித்தவுடன் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் உடனடியாக திருத்தப்பட்டு அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டது.
இதில் குறைவான மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கு தேவையான தக்க ஆலோசனைகள் மற்றும் இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த தேர்வில் தேர்வில் முதல் ஐந்து மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கு போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
+ There are no comments
Add yours