12-ம் வகுப்பு தகுதி… ரயில்வேயில் வேலை !

Spread the love

இந்திய ரயில்வேயில் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 9144 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Technician Grade – I (Signal)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1092

கல்வித் தகுதி : B.Sc Physics/ Electronics/ Computer Science/ Information Technology படித்திருக்க வேண்டும். அல்லது இதே பிரிவுகளில் Diploma in Engineering or Bachelor’s Degree in Engineering படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.07.2024 அன்று 18 வயது முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 29,200

Technician Grade – III

காலியிடங்களின் எண்ணிக்கை : 8,052

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.07.2024 அன்று 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 19,900

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 100 கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். கிரேடு வாரியாக தனித்தனி தேர்வுகள் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.04.2024

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.rrbchennai.gov.in/downloads/cen-022024/Detailed_CEN_02_2024_English.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours