இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பெண்கள் தையல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.
புதுச்சேரி லெனின் வீதியில் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள், வரும் 25ம் தேதி ஆகும்.
இந்த பயிற்சி பெற 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 100 சதவீத இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. 18 வயது முதல் 45 வரை இருக்க வேண்டும். 30 நாட்கள் முழு நேர பயிற்சியில், உணவுகள் வழங்கப்படுகிறது. 90 சதவீதம் செய்முறை பயிற்சியுடன், சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
புதுச்சேரியை சேர்ந்த கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. வரும் 29ஆம் தேதி பயிற்சி துவங்குகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours