எம்.பி.பி.எஸ் இன்டர்ன்ஷிப் உதவித் தொகை தொடர்பான வழக்கில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மூலம் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை விவரங்களை சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
எம்பிபிஎஸ் இன்டர்ன்ஷிப் பயிற்சியில் இருக்கும் மருத்துவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது தொடர்பான முக்கிய விவகாரத்தில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் உதவித்தொகை நிலை குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 1-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டுதலில், தேசிய மருத்துவ ஆணையத்தை ஒரு அட்டவணைப்படுத்தப்பட்ட கேள்விகளுக்கான விளக்கத்தை தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டது.
தேசிய மருத்துவ ஆணையம் முழு விவரங்களையும் வழங்கவில்லை என்ற உண்மையைக் கவனத்தில் கொண்டு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் பிரசன்னா பி வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு நான்கு வாரங்களுக்குள், முழு விவரங்களையும் வழங்க உத்தரவிட்டது.
இந்த வழகில் முந்தைய விசாரணையின் போது, மருத்துவக் கல்லூரிகள் எம்.பி.பி.எஸ் இண்டர்ன்ஷிப் பணி செய்யும் மருத்துவர்களுக்கு போதிய உதவித்தொகையை வழங்குவதில்லை என்று உச்ச நீதிமன்ற அமர்வு கவலை தெரிவித்தது.
இந்த வழக்கில் மே 6-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று வழக்கை ஒத்திவைத்தது.
+ There are no comments
Add yours