விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அக். 5-ம் தேதி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கும் முகாமில் 18 வயது முதல் 40 வயது வரையிலான வேலை தேடுவோர் கலந்து கொள்ளலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, பொறியியல், ஐடிஐ, டிப்ளாமோ, நர்சிங், பார்மசி முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வேலைநாடுநர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் தகுதிக்கு ஏற்ற சிறந்த ஊதியத்தில் பணி நியமன ஆணையை பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04146 – 226417 மற்றும் 94990 55906, 90805 15682, 70108 27725 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம். ‘www.tnprivatejobs.tn.gov.in’ என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours