தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையில் கோவை மாவட்டம் பேரூர் வட்டம் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் உப கோயில்களில் எழுத்தர், ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 21 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://marudhamalaimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி, துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மருதமலை, பேரூர் வட்டம், கோவை மாவட்டம் – 641016 ஆகும். விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி ஆகும்.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://marudhamalaimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
+ There are no comments
Add yours