ட்ரைனிங் ஆஃபீஸ்ர் வேலை – உடனே விண்ணப்பிங்க!!

Spread the love

ட்ரைனிங் ஆபிசர் (Training Officer), ரிசர்ச் ஆபீசர் (Research Officer), அசிஸ்டன்ட் ரிசர்ச் ஆபீஸர் (Assistant Research Officer) மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை UPSC ஆணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி Training Officer, Research Officer, Assistant Research Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 83 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.Sc, BE/B.Tech, Diploma, M.Com, M.Sc, MCA, ME/M.Tech, MS, PhD என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30,35, 40 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு 7th CPC Pay Matrix Level 7, 8,10,11,13, 13A மற்றும் 14 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும்.

தகுதியானவர்கள் Recruitment Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.30.05.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours