இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தொடர்ந்து இரண்டாம் நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில், அந்த தாக்குதலில் வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் பலியாகியுள்ளனர். அதன்படி, தாய்லாந்தை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள 20 ஆயிரம் இந்தியர்களும் பாதுகாப்பாக அவர்கள் தங்கியுள்ள இடத்திலேயே இருக்க வேண்டுமென இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கேட்டுள்ளனர். இந்தியர்கள் இதுவரை எந்தவித ஆபத்தின்றி பத்திரமாக இருப்பதாகவும் அங்குள்ள இஇந்திய தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்கள்.
இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் நுழைந்துள்ள ஹமாஸ் இயக்கத்தினர், துப்பாக்கி முனையில் பலரையும் பிணைக் கைதிகளாக வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இஸ்ரேல் ராணுவம் இன்று தெற்கு இஸ்ரேல் மற்றும் காசா பகுதியில் வான்வழித் தாக்குலில் ஈடுபட்டு வருகிறது. இன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours