மியான்மர் நாட்டில் கச்சின் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். அதனுடன் 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
சுரங்க இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பலத்த மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours