புதிதாக ஒரு சூரியன் கண்டுபிடிப்பு – ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் ஆச்சரிய புகைப்படம் !

Spread the love

பிரபஞ்சத்தின் ரகசியங்கள் குறித்த ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, புதியதாக பிறந்த சூரியன் ஒன்றை அடையாளம் கண்டிருக்கிறது. இது நமது சூரியனை போலவே இருப்பதால் இதற்கு ‘பேபி சன்’ என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? எதற்காக வந்திருக்கிறோம்? என்கிற கேள்விதான் எல்லா மனிதனையும் தற்போதுவரை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இதற்கான விடையை தேட நாம் வந்த வழியை நோக்கி பயணிக்க வேண்டும். அதாவது பூமி, சூரிய குடும்பம், அண்டம், பால்வழி அண்டம், விண்மீன் திரள்கள், பிரபஞ்சம் என அனைத்தையும் ஆராய வேண்டும். இந்த ஆய்வுக்காக அனுப்பப்பட்டதுதான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.

இந்த பிரபஞ்சம் ‘பெரு வெடிப்பு’ (Big Bang) எனும் நிகழ்வுகளுக்கு பின்னர்தான் பிறந்திருக்கிறது என்றும், அதன் பின்னர் மெல்ல உருவானதுதான் சூரிய குடும்பம், பூமி, உயிரினங்கள், மனிதர்கள் எல்லாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே பெரு வெடிப்பு நிகழ்ந்த போது என்ன நடந்தது என்பது குறித்து ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி ஆய்வு நடத்தி வருகிறது. இந்த ஆய்வின் ஒரு பகுதியாக நேற்று சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதாவது இந்த பிரபஞ்சத்திற்கு புதியதாக வந்திருக்கும் சூரியனை ஜேம்ஸ் வெப் அழகாக படம்பிடித்திருக்கிறது.

இது முழுமையான சூரியன் அல்ல. இது உருவாகி ஒரு சில ஆயிரம் ஆண்டுகள்தான் இருக்கும். நமது சூரியனுக்கு வயது 450 கோடி ஆண்டுகள். ஆனால் நம்முடைய சூரியன் இளையது. அப்படியெனில் வெறும் சில ஆயிரம் ஆண்டுகள் ஆன புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த சூரியன் மிக மிக இளையது. பிறந்து சில நாட்கள் ஆன குழந்தை போன்றது என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். எனவே இதற்கு சூரியக் குழந்தை (Baby sun) என்று அவர்கள் பெயரிட்டுள்ளனர். இது பூமியிலிருந்து 1,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது.

ஒளி ஆண்டு என்பது, ஒளி ஒரு விநாடிக்கு தோராயமாக 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும். இதே வேகத்தில் ஒளி ஒரு ஆண்டுக்கு எவ்வளவு தொலைவை கடக்கிறதோ அதைதான் ஒளி ஆண்டுகள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நமது சூரியன் இப்போது இருக்கும் அளவை விட 92 மடங்கு குறைந்து வெறும் 8 மடங்கு மட்டுமே இருந்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் இந்த புதிய சூரியனும் இருக்கிறது. இது இன்னும் சில கோடி ஆண்டுகள் கழித்து நமது சூரியனை போன்று வளரும்.

தற்போது இதில் கார்பன் மோனாக்சைடு, சிலிக்கான் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் செழுமையாக இருக்கின்றன. சூரியன் உருவாவதற்கு ஹைட்ரஜன் மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பேபி சூரியனை ஆராய்வதன் மூலம் நம்முடைய சூரியன் எப்படி உருவானது என்பதை தெரிந்துக்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாது தற்போது கண்டுபிடிக்கப்பட்ட சூரியன் பைனரி நட்சத்திரம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதாவது பிரபஞ்சத்தில் அனைத்து நட்சத்திரங்களும் இரண்டாகதான் இருக்கும். இதுதான் பைனரி ஸ்டார்ஸ் என்று அழைக்கப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours