நிலவின் மேற்பரப்பில் கந்தகம் உள்ளிட்ட பல்வேறு தனிமங்கள் இருப்பதை ரோவரில் உள்ள லிப்ஸ் கருவி (LIBS) உறுதிப்படுத்தியுள்ளது.
நிலவின் தென்துருவத்தின் அருகே தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே புறப்பட்ட பிரக்யான் ரோவர், நிலவுப் பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள லேசர் இண்டூஸ்டு பிரேக்டவுன் ஸ்பெக்ட்ராஸ்கோப் என்னும் கருவி, நிலவின் பரப்பில் கந்தகம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே எதிர்பார்த்தபடி, அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு, சிலிக்கான், ஆக்சிஜன் ஆகியன இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான தேடல் நடைபெற்று வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
லிப்ஸ் எனப்படும் கருவி பெங்களூரில் உள்ள இஸ்ரோ மின் ஒளியியல் அமைப்புகள் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டதாகும்.
+ There are no comments
Add yours