பிலிப்பைன்ஸ் ஆடை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 16 பேர் பலி!

Spread the love

பிலிப்பைன்ஸின் மெட்ரோ மணிலாவில் உள்ள கியூசான் தலைநகரில் டி-சர்ட் அச்சடிக்கும் தொழிலுக்கான கிடங்காகவும், அது தொழிலாளர்கள் தங்கும் விடுதியாகவும் பயன்படுத்தப்பட்ட கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் வணிக உரிமையாளர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை 5.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், 2017 ஆம் ஆண்டில், தெற்கு டாவோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர். கடந்த மே மாதம், மணிலாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க மத்திய தபால் அலுவலகக் கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours