அமெரிக்காவின் புளோரிடா மாநிலமும், கியூபாவும் இடாலியா புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராகி வருகின்றன.
அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ள இடாலியா என்னும் பெயர்கொண்ட புயல் அபாயகரமான மூன்றாம் வகைப் புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புயல் புளோரிடாவின் பிக் பெண்ட் என்னுமிடத்தில் நாளை கரையைக் கடக்கும் என அமெரிக்காவின் தேசியப் புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல பிராங்க்ளின் என்ற பெயர்கொண்ட மற்றொரு புயல் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளுக்கும், பெர்முடாவுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனக் கருதப்படும் இந்தப் புயல் இன்று வலுவிழக்கும் எனத் தேசியப் புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours