ஒப்புதல் அளித்த அமெரிக்கா..!

Spread the love

டென்மார்க்கிலும், நெதர்லாந்திலும் நிறுத்தப்பட்டுள்ள எப் 16 போர் விமானங்களை உக்ரைனுக்கு மாற்றுவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

உலகின் நம்பகமான போர் விமானங்களாகக் கருதப்படும் எப் 16 போர் விமானங்கள் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு மிகவும் பயன்படும் எனக் கருதப்படுகிறது.
இதனால் அமெரிக்காவின் இந்த முடிவை வரவேற்றுள்ள உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் அலெக்சி ரெஸ்னிகோவ், போரில் உக்ரைன் வெற்றியடைவது உறுதி எனத் தெரிவித்தார்.

முன்னதாக எப் 16 போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்குவதால் போர்ப்பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்பதால் அவற்றை வழங்கப் போவதில்லை என அமெரிக்கா தெரிவித்திருந்தது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours