இத்தாலியின் லம்பெடுசா தீவில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்ததில் 60 பேர் காணாமல் போயுள்ளதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.
துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸில் இருந்து புறப்பட்ட கப்பல், கேமரூன், புர்கினா பாசோ மற்றும் ஐவரி கோஸ்ட்டில் இருந்து புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு இத்தாலி அருகே பலத்த காற்று மற்றும் அதிக அலைகளில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 30க்கும் அதிகமானோர் மாயமாகி உள்ளனர். அவர்களில் ஏழு பெண்களும் ஒரு பிறந்த குழந்தையும் அடங்கும். இந்த விபத்தில் 38 பேர் மீட்கபட்ட நிலையில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours