மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையில் இருந்து செனகல் நாட்டைச் சேர்ந்த 63 பேர் படகில் மூலம் ஸ்பானிஷின் கேனரி தீவுகள் நோக்கி சென்றுள்ளது.
இந்த நிலையில் படகு கேப் வெர்டே தீவு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கவிழ்ந்ததில் படகில் பயணித்த அனைவரும் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மூழ்கியவர்களில் 56 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 7 பேரின் உடல்களை தேடி வருவதாக ஐ.நாவின் சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் பாதுகாப்பு உபகரணம் இல்லாததால் இந்த உயிர்சேதம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
+ There are no comments
Add yours