அமெரிக்காவின் சின்சினாட்டியில் நடைபெறும் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் சுவரேவ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் நாட்டின் கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் அலெக்சாண்டர் சுவரேவ, பிரான்ஸ் நாட்டின் அட்ரியன் மன்னாரினோவை ஆறுக்கு மூன்று, ஆறுக்கு இரண்டு என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை ஆறுக்குப் பூச்சியம், ஆறுக்கு நான்கு என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் கார்லஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பர்செல்லைத் தோற்கடித்தார்.
+ There are no comments
Add yours