இனி ட்விட்டரில் யாரையும் ப்ளாக் செய்ய முடியாது என்ற புதிய அறிவிப்பால் பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உலகளவில் ட்விட்டர் முக்கிய சமூகவலைத்தளமாக இருந்து வருகிறது. இந்த ட்விட்டரை எலன் மஸ்க் வாங்கிய பிறகு அதில் பல மாற்றங்களை கொண்டு வருகிறார்.
ட்விட்டர் நிறுவனம் தற்போது எக்ஸ் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த ட்விட்டரில் நமக்கு பிடிக்காத பதிவுகளை போடும் நபரை ப்ளாக் செய்யும் வசதி இருந்து வந்தது.
இந்நிலையில் ட்விட்டரில் பிளாக் செய்யும் வசதியை நீக்க இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருப்பது பயனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
+ There are no comments
Add yours