ரஷ்யாவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் !

Spread the love

ஒரு ட்ரோனை செயலிழக்க வைத்ததாகவும், மற்றொரு ட்ரோனை அழித்ததாகவும் ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.

ரஷிய தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் ராணுவம் இன்று ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது. மாஸ்கோ மாகாணத்தை குறிவைத்து நடந்த இந்த தாக்குதலை முறியடித்ததாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகருக்கு மேற்கே ரஸ்ஸ்கி மாவட்டத்தில் உக்ரைனின் ஒரு ட்ரோனை செயலிழக்க வைத்ததாகவும், அருகிலுள்ள இஸ்ட்ரின்ஸ்கி மாவட்டத்தில் மற்றொரு ட்ரோனை அழித்ததாகவும் ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.

இந்த ட்ரோன்களின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் 2 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours