டொனால்டு டிரம்ப், இந்திய கேப்டன் தோனியுடன் கோல்ஃப் விளையாடிய புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் விடுமுறையை கழித்து வரும் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கோல்ஃப் விளையாட அழைத்துள்ளார்.
டொனால்டு டிரம்ப்-இன் அழைப்பை ஏற்று தோனி அவரை சந்தித்து கோல்ஃப் விளையாடினார். இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் தனது கோல்ஃப் விளையாட்டு உடையில், முன்னாள் இந்திய கேப்டன் தோனியுடன் கோல்ஃப் விளையாடி உள்ளார்.
இந்த நிலையில் டொனால்டு டிரம்ப், இந்திய கேப்டன் தோனியுடன் கோல்ஃப் விளையாடிய புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் தோனியும் டிரம்பும் அருகருகே நின்று கேமராவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.
அடுத்த வருடம் அதிபர் தேர்தலில் போட்டிப்போட தயாராகி வரும் டொனால்டு டிரம்ப் தோனியின் அமெரிக்க வருகையை தெரிந்துக்கொண்டு அவரை கோல்ஃப் விளையாட அழைத்துள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
+ There are no comments
Add yours