அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடக்கும்?

Spread the love

அமெரிக்காவில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் எந்த தேதியில் வாக்குப் பதிவு நடைபெறும்? எந்த தேதியில் புதிய அதிபர் பதவியேற்பார் என்பதும் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெறும். அதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி புதிய அதிபர் பதவியேற்பார்.

அமெரிக்காவில் மக்கள் நேரடியாக ஓட்டு போட்டு அதிபரை தேர்ந்தெடுப்பதில்லை. அதற்கு பதிலாக, அதிபரை தேர்ந்தெடுக்கக்கூடிய தேர்வுக் குழுவுக்கே வாக்களிப்பார்கள். தேர்வுக் குழுவினரே, ஓட்டு போட்டு அதிபரை தேர்வு செய்வார்கள். அந்த குழுவுக்கு எலக்டோரல் காலேஜ் (Electoral College) என்று பெயர். மக்கள் தொகையைப் பொறுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட எலக்டோரல் காலேஜ் வாக்குகள் இருக்கும். மொத்தம் 538 வாக்குகள். இதில் 270 வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளர் அதிபராக பதவியேற்பார்.

நாடாளுமன்றத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அதே எண்ணிக்கையிலான உறுப்பினர்களை தேர்வுக் குழுவும் கொண்டிருக்கும். தேர்வுக் குழுவுக்கும் நாடாளுமன்றத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அதிபரை தேர்ந்தெடுப்பதை பணியாகக் கொண்ட தேர்வுக் குழுவினரின் வாக்குகளைப் பெறுவதற்கு வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

ஒருவகையில், வாக்காளர்கள் மாநில அளவில் கட்சிகளின் பிரதிநிதிகளைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். தேசிய அளவில் போட்டியிடும் வேட்பாளர்களை அல்ல.

மைனே மற்றும் நெப்ராஸ்கா மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் ‘வெற்றி பெற்றவர் அனைத்து வாக்குகளையும் எடுத்துக்கொள்வார்’ என்ற விதி உள்ளது. அதாவது எந்த வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளைப் பெறுகிறாரோ அவருக்கு அந்த மாநிலத்தின் அனைத்து எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் வழங்கப்படும். இதற்கு ‘வின்னர் டேக்ஸ் ஆல்’ என்று பெயர். அதனால்தான் 2016-ல் ஹிலாரி கிளிண்டன் தேசிய அளவில் மக்களின் வாக்குகளை அதிகம் பெற்றாலும், எலக்டோரல் காலேஜ் வாக்குகளை குறைவாக பெற்றதால் டிரம்பிடம் தோல்வியைத் தழுவினார். எனவே, தேசிய அளவில் அதிக வாக்குகளைப் பெற்றாலும் தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தேர்வுக் குழு உறுப்பினர்கள், தங்களது கட்சியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்பு கட்டாயமும் கிடையாது. அதிபர் தேர்தல் முடிந்து புதிய அதிபரை தேர்ந்தெடுத்தபின் தேர்வுக்குழு கலைக்கப்பட்டுவிடும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours