ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7-10 தேதிகளில் இந்தியா வருகிறார். வாஷிங்டன், 2023ம் ஆண்டு ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி, நாட்டின் பல்வேறு இடங்களில் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி-20 நாடுகளின் பிரிதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர்.
இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வர உள்ளார் என்றும், செப்டம்பர் 10 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபின் நாடு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜி 20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் செப்டம்பர் 7-10 ஆம் தேதி வரை இந்தியாவின் புதுடெல்லிக்கு செல்கிறார்.
அங்கு அதிபர் பைடன் மற்றும் G20 பிரிதிநிதிகள் உலகளாவிய பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான கூட்டு முயற்சிகள் பற்றி விவாதிப்பார்கள், சுத்தமான எரிசக்தி மாற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, உக்ரைனில் புதினின் போரின் பொருளாதார மற்றும் சமூக தாக்கங்களைக் குறைத்தல் மற்றும் பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் திறனை அதிகரிப்பது உட்பட. உலக வங்கி, உலக சவால்களை எதிர்கொள்வது உட்பட, வறுமையை சிறப்பாக எதிர்த்துப் போராடுவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours