ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
புதுதில்லி வரும் செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் ஜி20 தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோதியின் அழைப்பை ஏற்று ஏராளமான நாடுகள் ஜி20 மாநாட்டில் பங்கேற்க ஆர்வம் தெரிவித்துள்ளன.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நான்கு நாள் பயணமாக இந்தியா வருகை தர உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அவரது இந்த பயணத்தின் போது, ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளின் பிரதிநிதிகளுடன் உலகலாவிய காலநிலை மாற்றத்திற்கான சவால்கள், உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours