மொராக்கோ நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு… 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு !

Spread the love

மொராக்கோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது.இதில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 2,012 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 2,059 பேர் காயமடைந்த நிலையில். சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதில் 1,409 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்பட்டும் என்று மொராக்கோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு மொராக்கோ நாட்டில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான வரலாற்றுச் சிறப்புமிக்க மராகேஷிலிருந்து தென்மேற்கே 72 கி.மீ தூரத்தில் ஏற்பட்டது,இதில் பல வரலாற்று கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பெரும்பாலான உயிரிழப்புகள் தெற்கே உள்ள அல்-ஹவுஸ் மற்றும் டாரூடன்ட் மாகாணங்களில் உள்ள மலைப்பகுதிகளில் நிகழ்ந்துள்ளதாக அல் ஜசீரா செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி X தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், “மொராக்கோவில் நிலநடுக்கத்தால் உயிர் இழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் மொராக்கோ மக்களுடன் உள்ளன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இந்த இக்கட்டான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours